கொள்ளு கிரேவி
கொள்ளை சுத்தம் செய்து எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய கொள்ளை நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
தேவையான பொருள்கள்:
கொள்ளு- 1 கிண்ணம்
புளி- கோலிக்குண்டு அளவு
Advertisement
Advertisement
தக்காளி- 2
பச்சை மிளகாய் - 3
பூண்டு- 5 பல்
வெங்காயம்- 2
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
கடுகு, உளுந்தம்பருப்பு - தாளிக்க
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
கொள்ளை சுத்தம் செய்து எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய கொள்ளை நன்கு வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியை கரைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து, பின்னர் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் அதனுடன் கொள்ளு, மிளகாய்த் தூள், தேவையான உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக வைத்து நன்கு மசித்து இறக்கவும். தேவைப்பட்டால் மேலே கொத்துமல்லி தழை தூவலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.