பொட்டுக்கடலை வடை
பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் மெல்லியதாக அரைத்துக் கொள்ளவும்.
தேவையான பொருள்கள்:
பொட்டுக்கடலை - 1 கிண்ணம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
Advertisement
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 2 பல்
மிளகாய்த் தூள் -அரை தேக்கரண்டி
அரிசி மாவு - 1 மேஜை கரண்டி
இஞ்சி, கறிவேப்பிலை, கொத்துமல்லி உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -பொரிக்க
செய்முறை:
பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் மெல்லியதாக அரைத்துக் கொள்ளவும். அதில் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்க்கவும். மிளகாய்த் தூள், உப்பு, அரிசி மாவு சேர்த்து நன்றாகக் கலக்கவும். கொஞ்சம் தண்ணீர் தூவி, வடை மாவு மாதிரி பிசையவும். கைகளில் சிறிய வடை வடிவத்தில் தட்டி எடுக்கவும். காய்ந்த எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.