முகப்பு
செய்திகள்

உடற்தகுதியை நிரூபித்தார் புவனேஸ்வர் குமார்: உத்தரப் பிரதேச டி20 அணியில் சேர்ப்பு

ஐபிஎல் போட்டி வரை விளையாட வாய்ப்பில்லை என்று கருதப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார்...

Updated On : 2 ஜனவரி 2021, 5:31 pm IST
பகிர்:

ஐபிஎல் போட்டி வரை விளையாட வாய்ப்பில்லை என்று கருதப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், தனது உடற்தகுதியை நிரூபித்து, உத்தரப் பிரதேச டி20 அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரபல வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து நான்கு ஆட்டங்கள் மட்டுமே ஆடிய நிலையில் ஐபிஎல் போட்டியிலிருந்து அவர் வெளியேறினார்.  

தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களிலும் புவனேஸ்வரால் பங்கேற்க முடியாமல் போனது.

Advertisement

Advertisement

பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதமியில் சிகிச்சை பெற்று வந்த புவனேஸ்வர் குமாரால், ஆறு மாதங்களுக்கு மீண்டும் விளையாட முடியாது, பழையபடி முழு உடற்தகுதியை அடைய சிறிது காலமாகும். அதனால் ஐபிஎல் வரை எந்த ஒரு போட்டியிலும் அவரால் கலந்துகொள்ள முடியாது என பிசிசிஐயைச் சேர்ந்த ஒருவர் சமீபத்தில் தகவல் தெரிவித்தார்.

இந்நிலையில் அனைவரும் ஆச்சர்யப்படும்படி தனது உடற்தகுதியை நிரூபித்துள்ளார் புவனேஸ்வர் குமார். இதையடுத்து சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கான உத்தரப் பிரதேச டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். இதையடுத்து தில்லியிருந்து பெங்களூர் சென்று டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளார். 

இதனால், இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் புவனேஸ்வர் குமார் தேர்வாக வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments