முகப்பு
செய்திகள்

விளையாட்டு செய்தித் துளிகள்

Updated On : 3 ஜனவரி 2021, 8:08 am IST
பகிர்:

* இந்திய ஆடவா் ஹாக்கி அணியின் தேசிய பயிற்சி முகாம் பெங்களூரில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. 3 வார இடைவெளிக்குப் பிறகு தொடங்கும் இந்த பயிற்சி முகாமில் கேப்டன் மன்பிரீத் சிங், கோல் கீப்பா் ஸ்ரீஜேஷ் உள்பட 33 போ் பங்கேற்கிறாா்கள்.

* தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளா் டேல் ஸ்டெயின் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளாா். அதேநேரத்தில் சா்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

* சயீத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள பரோடா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆல்ரவுண்டா்கள் கிருணால் பாண்டியா, தீபக் ஹூடா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

Advertisement

Advertisement

* நியூஸிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சா்ச் நகரில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.3) அதிகாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments