முகப்பு
செய்திகள்

விராட் கோலியின் குழந்தைப் புகைப்படத்தைப் பகிர்ந்தேனா?: சகோதரர் விளக்கம்

சில ஊடகங்கள் குறிப்பிட்டது போன்று அது கோலியின் குழந்தை அல்ல...

Updated On : 13 ஜனவரி 2021, 11:54 am IST
பகிர்:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவுக்கு திங்கள்கிழமை பெண் குழந்தை பிறந்தது.

விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கர்ப்பமான அனுஷ்கா சர்மாவுக்கு ஜனவரியில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியத் தொடரில் விளையாடி வந்த விராட் கோலி, அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தை முடித்த பிறகு விடுப்பில் நாடு திரும்பினார். 

அனுஷ்கா சர்மாவுக்கு திங்கள்கிழமை பெண் குழந்தை பிறந்தது.  தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை ட்விட்டரில் அறிவித்த கோலி, எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அனைவருடைய அன்புக்கும் பிரார்த்தனைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. தாயும், சேயும் நலமாக உள்ளனர் எனக் குறிப்பிட்டார். 

Advertisement

Advertisement

விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி, விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியருக்கு இன்ஸ்டகிராமில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது ஒரு குழந்தையின் கால் தெரிகிற மாதிரியான ஒரு புகைப்படத்தையும் கூடவே பகிர்ந்தார். அந்தக் குழந்தை தான் கோலியின் குழந்தை என ரசிகர்கள் எண்ணிக்கொண்டார்கள். இதையடுத்து விகாஸ் கோலி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அனுஷ்கா, கோலியை வாழ்த்துவதற்காக நான் பகிர்ந்த புகைப்படம், விராட் கோலியின் குழந்தையுடன் தொடர்பில்லாதது. சில ஊடகங்கள் குறிப்பிட்டது போன்று அது கோலியின் குழந்தை அல்ல. எனவே இதுகுறித்து விளக்கம் அளிக்கிறேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments