முகப்பு
விளையாட்டு

சமூக வலைதளங்களிலும் சச்சினுக்கே முதலிடம்!

சமூக வலைதளங்களில் பெருவாரியான நபர்களால் பேசப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் வரிசையில் சச்சின்

Updated On : 22 மார்ச் 2013, 12:59 am IST
பகிர்:

சமூக வலைதளங்களில் பெருவாரியான நபர்களால் பேசப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் வரிசையில் சச்சின் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 3 போட்டிகளின்போது சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களின் சமூக கருத்துகள் குறித்து ஐபிஎம் என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது.

அதன்படி ஃபேஸ்புக், டுவிட்டர், யூ-டியூப், வலைதளங்கள் (பிளாக்ஸ்) உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் 50 சதவீத ரசிகர்களின் கருத்துகள், சச்சினைப் பற்றியதாகவும், அவருடைய கடந்தகால சாதனைகள், அவரின் ஓய்வு எப்போது என்பதைப் பற்றியதாகவுமே இருந்துள்ளன. அவருக்கு அடுத்தபடியாக கேப்டன் தோனி பற்றியும், முரளி விஜய் பற்றியும் ரசிகர்கள் தங்களின் கருத்துகளை பரிமாறியுள்ளனர்.

Advertisement

Advertisement

பெளலர்களில் ரவீந்திர ஜடேஜா பற்றி ஏராளமானோர் பேசியுள்ளனர்.

டெஸ்ட் தொடரின் தொடக்கத்தில் தோனி மீது ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் இருந்ததாகவும், அதன்பிறகு அவர் சிறப்பாக விளையாடியதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார் என்றும் ஐபிஎம் தெரிவித்துள்ளது.

ஷிகர் தவன் தனது அறிமுகப் போட்டியில் 187 ரன்கள் குவித்த பிறகு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவிப்பது சுமார் 200 சதவீதம் அதிகரித்தது. 1.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தவனைப் பற்றி சமூக வலைதளங்களில் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.