முகப்பு
விளையாட்டு

பாகிஸ்தான் வெற்றி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது

Updated On : 22 மார்ச் 2013, 1:00 am IST
பகிர்:

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பாகிஸ்தான்.

தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் டிவில்லியர்ஸ் 75, டேவிட் மில்லர் 67 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் இர்ஃபான், ஜுனைத் கான், அஜ்மல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Advertisement

Advertisement

பின்னர் ஆடிய பாகிஸ்தான் 48.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக இம்ரான் ஃபர்ஹத் 93, கேப்டன் மிஸ்பா உல் ஹக் 80 ரன்கள் எடுத்தனர்.

முன்னதாக பாகிஸ்தானின் முகமது ஹபீஸýக்கு பீல்டிங்கில் குறுக்கிட்டதாக அவுட் கொடுக்கப்பட்டது.

ஃபர்ஹத் அடித்த பந்தில் 2-வது ரன் எடுக்க ஓடியபோது கீப்பரை பார்த்துக் கொண்டே ஓடினார் ஹபீஸ். அப்போது கீப்பர், பெüலரை நோக்கி எறிந்த பந்து ஹபீஸ் மீது பட்டது. இதையடுத்து பீல்டிங்குக்கு இடையூறு செய்ததாக அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது.

இந்த புதிய முறை அவுட் சமீபத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் அவுட்டான முதல் வீரர் ஹபீஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.