முகப்பு
விளையாட்டு

ஐடிஎஃப் டென்னிஸ்: சித்தார்த் ராவத் தோல்வி

கோவையில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியில் தர வரிசையில் 6-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவின் சித்தார்த் ராவத் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

Updated On : 12 ஜூன், 2013 at 12:13 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM

கோவையில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியில் தர வரிசையில் 6-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவின் சித்தார்த் ராவத் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

கோவை புரோ சர்வ் டென்னிஸ் அகாதெமியுடன் கோவை டென்னிஸ் சங்கம் இணைந்து ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியை நடத்துகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டி முடிவுகள்:

தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய வீரர் ஜீவன் நெடுஞ்செழியன் 6-2, 6-1 என்ற நேர் செட்டுகளில் சக வீரர் வினோத் ஸ்ரீதரையும், இந்தியாவின் கருண்தேவ் சிங் 6-3, 6-1 என்ற நேர் செட்டுகளில் சகவீரர் தருண் நாத் சூரத்தையும் எளிதில் வென்றனர்.

Advertisement

தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவின் விஜயானந்த் மாலிக் 6-4, 6-2 என்ற நேர் செட்டுகளில் சக வீரர் அபிஜித் திவாரியையும், இந்தியாவின் பாரிக் முகமத் 6-2, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் போராடி, தர வரிசையில் 6-ஆவது இடத்தில் உள்ள சக வீரர் சித்தார்த் ராவத்தையும் வென்றார்.

தைவானின் ஜூய் சென் ஹூங் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜேக் இட்ஸ்டெயினையும், தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ள இந்தியாவின் விக்னேஷ் பெரணமல்லூர் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் குமார பி.ஆதவெளியையும், அஜய் செல்வராஜ் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் சாகர் அகுஜாவையும்

வென்றனர்.

இந்தியாவின் அப்துல்லா ஷேக் 6-0 என்ற கேம் கணக்கில் சூரஜ் பேணிவாலை வென்று முதல் செட்டைக் கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டில் 3-0 என்ற கேம் கணக்கில் முன்னிலையில் இருந்தபோது சூரஜ் பேணிவால் ஆட்டத்தில் இருந்து விலகியதையடுத்து அப்துல்லா ஷேக் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்

பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.