தேசிய கூடைப்பந்து: வருமான வரித்துறை வெற்றி
மதுரையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் வருமான வரித்துறை, கேரள மின்வாரிய அணிகள் வெற்றி பெற்றன.
மதுரையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் வருமான வரித்துறை, கேரள மின்வாரிய அணிகள் வெற்றி பெற்றன.
மதுரை மாவட்டம், பசுமலை சிஎஸ்ஐ மைதானத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி சனிக்கிழமை தொடங்கியது. மதுரை மாவட்ட கூடைப்பந்து சங்கம் மற்றும் பெகசஸ் கூடைப்பந்து கிளப் சார்பில் நடைபெறும் இப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் கேரள மின்வாரிய அணி 63-46 என்ற புள்ளிக் கணக்கில் தெற்கு மண்டல போலீஸ் அணியையும், கேரள போலீஸ் அணி 93-76 என்ற புள்ளிக் கணக்கில் சென்னை அரசு சிறப்பு விளையாட்டு விடுதி அணியையும் தோற்கடித்தன. மற்றொரு ஆட்டத்தில் வருமான வரித்துறை அணி 63-37 என்ற புள்ளிக் கணக்கில் கோபாலன் நினைவு அணியை வீழ்த்தியது.
Advertisement
Advertisement