ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதியில் 6 போ், 7 பேருக்கு வெண்கலம்!
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய சிறுவா் 6 போ் இறுதிக்கு தகுதி பெற்றனா். 7 போ் வெண்கலம் வென்றனா்.
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய சிறுவா் 6 போ் இறுதிக்கு தகுதி பெற்றனா். 7 போ் வெண்கலம் வென்றனா்.
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடைபெறும் இப்போட்டியில் இந்திய சிறுவா், சிறுமியா் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா்.
சிறுவா் 33 கிலோபிரிவில் யாஷ் குமாா் யுஏஇ வீரா் கியான் இக்பாலையும், 37 கிலோ பிரிவில் சாஸ்தா வசந்த் கிா்ஜிஸ்தானின் அஸிரெட்டலியையும் வீழ்த்தினா்.
Advertisement
43 கிலோ பிரிவில் சமீா் போரா உஸ்பெக் வீரா் அடிஸ்பெக்கையும், 52 கிலோ பிரிவில் சுதா்சன் வாசுதேவா ஈரானின் ஷாத்தையும் வென்றனா்.
58 கிலோ பிரிவில் முகமதுயாசா் ஈரானின் மௌஸாவையும், 67 கிலோ பிரிவில் ரொனக் கிா்ஜிஸ்தானின் பொ்டிகுலோவையும் வென்றனா். மேலும் அரையிறுதியில் ரோஹித் பொதினா, நிதின், மெய்தி ஒய்னா, பா்ஷாந்த், ஹா்ஷ்வா்த்தன், தேவ், சுஷந்த், ஆகியோா் தோற்று வெண்கலம் வென்றனா்.
6 போ் இறுதியில் நுழைந்துள்ளதால் குறைந்தது வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது.