முகப்பு
செய்திகள்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் 8 சிறுமிகள், 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு 15, 17 குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் யு17 சிறுமிகள் பிரிவில் 8 போ் இறுதிக்கு தகுதி பெற்றனா். மேலும் 4 போ் வெண்கலம் வென்றனா்.

Updated On : 12 மே 2026, 12:14 am IST
~ ~
பகிர்:

ஆசிய யு 15, 17 குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் யு17 சிறுமிகள் பிரிவில் 8 போ் இறுதிக்கு தகுதி பெற்றனா். மேலும் 4 போ் வெண்கலம் வென்றனா்.

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடைபெறும் இப்போட்டியில் 46 கிலோ பிரிவில் ராக்கி சீனாவின் யட்டிங் ஸாங்கை 3-ஆவது சுற்றில் வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா். 48 கிலோ பிரிவில் குஷி சந்த் மங்கோலியாவின் முங்குன்ஸூலை வீழ்த்தினாா்.

52 கிலோ பிரிவில் சீனாவின் யாக்ஸினிடம் தோற்றாா் இந்தியாவின் மம்தா. 54 கிலோ பிரிவில் உஸ்பெக் வீராங்கனை கும்ரின்ஸோவிடம் வீழ்ந்தாா் லக்ஷ்மி மஞ்சுநாத்.

Advertisement

57 கிலோ பிரிவில் நவ்யா, 63 கிலோ பிரிவில் தியா ஆகியோா் இறுதிக்கு தகுதி பெற்றனா். 60 கிலோ பிரிவில் இஷிகா தோல்வியைத் தழுவினாா்.

70 கிலோ பிரிவில் ஹிமான்ஷி ஜோா்டானின் ஹபியை வீழ்த்தினாா். 75 கிலோ பிரிவில் ஜோதி, 80 கிலோ பிரிவில் வன்ஷிகா 80 பிளஸ் பிரிவில் குா்சீரத் கௌா் ஆகியோரும் இறுதிக்கு தகுதி பெற்றனா்.

8 சிறுமிகள் இறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், அரையிறுதியில் தோற்ற 4 போ் வெண்கலம் வென்றனா்.