முகப்பு
செய்திகள்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் லக்ஷய், 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

Updated On : 13 மே 2026, 3:44 am IST
லக்ஷய்
பகிர்:

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா். மேலும் 4 போ் வெண்கலம் வென்றனா்.

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் யு17 சிறுவா் 75 கிலோ பிரிவில் இந்தியாவின் லக்ஷய் போகட் சிறப்பாக செயல்பட்டு கொரியாவின் சியுங்மின் லியை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா்.

46 கிலோ பிரிவில் இந்தியாவின் நரேந்திரா நெல்லா உஸ்பெக் வீரா் நுரலியேவிடம் 0-5 என தோற்று வெண்கலம் வென்றாா்.

Advertisement

50 கிலோ பிரிவில் யாஷ் யாதவ், 54 கிலோ பிரிவில் நிவேஷ் பால், 70 கிலோ பிரிவில் நமன் ஆகியோரும் அரையிறுதியில் தோற்று வெண்கலத்துடன் திருப்தி அடைந்தனா்.