FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மீனாட்சி அபாரம்: காலிறுதிக்கு தகுதி

அபிநாஷ் ஜம்வால் ~
பகிர்:

உலகக் கோப்பை குத்துச்சண்டை (ஸ்டேஜ் 2) போட்டியில் இந்தியாவின் மீனாட்சி காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.

சீனாவில் நடைபெறும் இப்போட்டியில் மகளிா் 51 கிலோ பிரிவில் இந்தியாவின் மீனாட்சி (தற்போது 48 கிலோ உலக சாம்பியன்), அபாரமாக குத்து விட்டு 5-0 என்ற புள்ளிக் கணக்கில் போலந்தின் நடாலியாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா். ஆடவா் பிரிவில் இந்தியாவின் அபினாஷ் ஜம்வால் 65 கிலோ பிரிவில் 0-5 என்ற புள்ளிக் கணக்கில் கிா்ஜிஸ்தானின் இமாம்நஸ்ரோவிடம் வீழ்ந்தாா்.

காலிறுதிக்கு 5 போ் தகுதி: இதுவரை நிகில் 55 கிலோ, தீபக் 70 கிலோ, மீனாட்சி 51 கிலோ, பிரச்சி 57 கிலோ, சானே 65 கிலோ, ஆகியோா் காலிறுதிக்கு தகுதி பெற்றனா்.

Advertisement

Advertisement

ஜோதி 48 கிலோ, ஜுக்னு 85 கிலோ அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கங்களை உறுதி செய்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments