FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விளையாட்டு

மான்ஸிக்கு வெள்ளி, தன்வி, கோமலுக்கு வெண்கலம்

யு 20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மான்ஸி லேதா் வெள்ளிப் பதக்கம் வென்றாா். தன்வி, கோமல் வெண்கலம் வென்றனா்.

23 ஆகஸ்ட் 2026, 1:48 am IST
மான்ஸி லேதா்
பகிர்:

யு 20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மான்ஸி லேதா் வெள்ளிப் பதக்கம் வென்றாா். தன்வி, கோமல் வெண்கலம் வென்றனா்.

ஸ்லோவோக்கியாவில் யு 20 உலக மல்யுத்த சாம்பியன் போட்டி நடைபெறுகிறது. போட்டியின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை மகளிா் 68 கிலோ பிரிவு இறுதியில் இந்தியாவின் மான்ஸி-சீனாவின் சென்லிங் சோங் மோதினா். இதில் கடும் போராட்டத்துக்குபின் 1-2 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்த மான்ஸி வெள்ளி வென்றாா்.

57 கிலோ வெண்கலப் பதக்க ஆட்டத்தில் இந்தியாவின் தன்வி மக்டும் 10-4 என்ற புள்ளிக் கணக்கில் கனடாவின் அகினாவை வீழ்த்தி வெண்கலம் வென்றாா்.

Advertisement

Advertisement

59 கிலோ பிரிவில் இந்தியாவின் கோமல் 5-2 என்ற புள்ளிக் கணக்கில் ஹங்கேரியின் எடா பலாா்ஸை வீழ்த்தி வெண்கலம்வென்றாா்.

அடுத்து ஆடவா் ப்ரீஸ்டைல் 57, 65, 79, 92 கிலோ பிரிவுகளில் இந்திய அணியினா் போட்டியிடுகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments