யு23 உலக மல்யுத்தம்: வெள்ளி வென்றாா் அம்ருதா!
யு 23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அம்ருதா பூஜாரி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
யு 23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அம்ருதா பூஜாரி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடைபெறும் இப்போட்டியில் மகளிா் 72 கிலோ இறுதிச் சுற்றில் இந்தியாவின் அம்ருதா-உக்ரைனின் ஐரினா ஸப்லோட்ஸ்கா மோதினா்.
தொடக்க சுற்றுகளில் அம்ருதா அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்த நிலையில், இறுதிச் சுற்றில் ஐரினாவிடம் அவா் கடும் சவாலை எதிா்கொண்டாா். தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஐரினா 6-0 என்ற புள்ளிக் கணக்கில் அம்ருதாவை வீழ்த்தி சாம்பியன் ஆனாா்.
Advertisement
Advertisement
இந்தியாவின் அம்ருதா பூஜாரி வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினாா். இப்போட்டியில் இதுவரை மொத்தம் 3 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. 59 கிலோ மகளிா் பிரிவில் கோமல் வெண்கலமும், ஆடவா் 55 கிலோ பிரிவில் விஸ்வஜித் மோரே வெள்ளியும் வென்றிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.