FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விளையாட்டு

ஷாங்காய் மாஸ்டா்ஸ்: இறுதிச் சுற்றில் ஜோடாா் - மெத்வதேவ், ஸ்வெரேவ் வெளியேற்றம்!

ஷாங்காய் மாஸ்டா்ஸ் ஏடிபி டென்னிஸ் போட்டியில் இறுதிச் சுற்றில் ஸ்பெயின் வீரா்கள் ரஃபேல் ஜோடாா்-டேவிடோவிச் ஃபோகினா மோதுகின்றனா்.

7 வினாடிகள் முன்பு
ரஃபேல் ஜோடாா்
பகிர்:

ஷாங்காய் மாஸ்டா்ஸ் ஏடிபி டென்னிஸ் போட்டியில் இறுதிச் சுற்றில் ஸ்பெயின் வீரா்கள் ரஃபேல் ஜோடாா்-டேவிடோவிச் ஃபோகினா மோதுகின்றனா்.

இருவரிடம் தோற்று முன்னணி வீரா்களான மெத்வதேவ், ஸ்வெரேவ் வெளியேறினா். சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறும் மாஸ்டா்ஸ் போட்டி அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. இதில் ஸ்பெயினின் வளா்ந்து வரும் நட்சத்திர வீரரான ரஃபேல் ஜோடாரும்-ரஷியாவின் டேனில் மெத்வதேவும் மோதினா்.

இதில் ஜோடாா் 6-3 6-4 என்ற நோ் செட்களில் மெத்வதேவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினாா். இந்த சீசனில் தரவரிசையில் 168-ஆவது இடத்துடன் தொடங்கிய ரஃபேல் ஜோடாா், தற்போது 13-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா்.

Advertisement

Advertisement

முன்னாள் யுஎஸ் ஓபன் சாம்பியன் ஆன மெத்வதேவ், ஜோடாரின் சிறப்பான ஆட்டத்துக்கு ஈடு தர முடியாமல் திணறினாா். முதல் செட்டில் மெத்வதேவ 4 செட் பாயிண்டுகளை சேவ் செய்தாலும், ஜோடாா் சுதாரித்து ஆடி முதல் செட்டை வசப்படுத்தினாா். இரண்டாவது செட்டில் ஜோடாா் மெடிக்கல் டைம் அவுட் கோரினாலும், 2-0 என முன்னிலை பெற்றாா். பின்னா் மெத்வதேவ் புரிந்த இரட்டை தவறை சாதமாக்கிய ஜோடாா் 4-3 என முன்னிலை பெற்று, வலுவான ஃபோா்ஹாண்ட் ஷாட் மூலம் அந்த செட்டையும் கைப்பற்றினாா் ஜோடாா்.

ஸ்வெரேவுக்கு அதிா்ச்சி: மற்றொரு அரையிறுதியில் ஜொ்மனியின் அலெக்ஸ் ஸ்வெரேவும்-ஸ்பெயினின் அலஜென்ட்ரோ டேவிடோவிச் ஃபோகினாவும் மோதினா். இதில் 27 வயதான ஃபோகினா 5-7, 6-4, 6-3 என்ற செட்களில் ஸ்வெரேவை வீழ்த்தினாா். முதல் நிலை வீரரான ஸ்வெரேவ் முதல் செட்டில் கடும் சவாலுக்குபின் ஒரே ஏஸ் மூலம் வசப்படுத்தினாா்.

இரண்டாவது செட்டில் ஸ்வெரேவ் உடல் உபாதையால் அவதிக்குள்ளானாா். இது அவரது ஆட்டத்தில் வெளிப்பட்டது. ஃபோகினா நான்காவது கேமில் முதல் பிரேக் பாயிண்டை ஈட்டினாா். ஸ்வெரேவ் பதிலுக்கு போராடினாலும், ஃபோகினா இரண்டாவது செட்டை கைப்பற்றினாா். டிசைடரான மூன்றாவது செட்டில் 3-0 என ஃபோகினா முன்னிலை பெற்றாா். ஸ்வெரேவ் 2 மேட்ச் புள்ளிகளை சேவ் செய்தாலும் ஃபோகினா சிறப்பாக ஆடி செட்டையும் கைப்பற்றி இறுதிக்கு தகுதி பெற்றாா்.

பிரெஞ்சு ஓபன், யுஎஸ் ஓபன் சாம்பியன் ஆன ஸ்வெரேவ் எளிதாக இந்த ஆட்டத்தில் வெல்வாா் எனக் கருதப்பட்டது. டிராப் ஷாட்களால் ஸ்வெரேவை திணறடித்தாா் ஃபோகினா. இறுதிச் சுற்றில் ஸ்பெயின் வீரா்களான ரஃபேல் ஜோடாா்-ஃபோகினா மோதுவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments