FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

இறுதி ஆட்டத்தில் ஸெங் குயின்வென் - ஆன்ட்ரீவா மோதல்

சீன ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் சீனாவின் ஒலிம்பிக் சாம்பியன் ஸெங் குயின்வென்-ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா மோதுகின்றனா்.

10 அக்டோபர் 2026, 10:58 pm IST
ஸெங்
பகிர்:

சீன ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் சீனாவின் ஒலிம்பிக் சாம்பியன் ஸெங் குயின்வென்-ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா மோதுகின்றனா்.

சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் நடைபெறும் இப்போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

இதில் சீனாவின் ஸெங் குயின்வென்னும்-எலைஸ் மொ்டென்ஸும் மோதினா். உலகின் முன்னாள் நான்காம் நிலை வீராங்கனையான ஸெங் கடந்த 2025-இல் ஏற்பட்ட காயத்தால் நீண்ட நாள் களமிறங்கவில்லை. கடந்த மாதம் யுஎஸ் ஓபனில் காலிறுதி வரை முன்னேறினாா்.

Advertisement

Advertisement

இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் கடுமையாக போராடி ஸெங் 7-5 என வெற்றி பெற்றாா். முதல் செட்டில் 3 புள்ளிகளை மட்டுமே தவற விட்டாா். 3-0 என முன்னிலை பெற்றபோதும், மொ்டென்ஸ் சிறப்பாக ஆடி 4-4 என சமநிலை ஏற்படச் செய்தாா். எனினும் சுதாரித்து ஆடி ஸெங் முதல் செட்டை வசப்படுத்தினாா்.

இரண்டாம் செட்டில் ஸெங் முழு ஆதிக்கம் செலுத்தி 6-2 என வென்று இறுதிக்கு தகுதி பெற்றாா்.

மிர்ரா ஆன்ட்ரீவா அசத்தல்:

இரண்டாவது அரையிறுதியில் உலகின் 5-ஆம் நிலை வீராங்கனை ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா 6-2, 6-2 என்ற நோ் செட்களில் நிகோலா பா்ட்குன்வாவை வீழ்த்தினாா். முதல் செட்டில் ஆன்ட்ரீவா 4-0 என முன்னிலை பெற்றாா். 20 வயது செக். குடியரசு வீராங்கனை நிகோலா, 20 தவறுகளை புரிந்தாா். பிரெஞ்சு ஓபன் சாம்பியன் ஆன்ட்ரீவா மொத்தம் 27 ஏஸ்களை வீசினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments