FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உலக தற்கலைக் கூட்டமைப்பு சாம்பியன்ஷிப்: சூரஜ் சுனில் தங்கப் பதக்கம் வென்றார்!

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகத் தற்கலைக் கூட்டமைப்புகளின் ஒன்றியத்தின் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சூரஜ் சுனில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

13 அக்டோபர் 2026, 10:15 am IST
உலக தற்கலைக் கூட்டமைப்பு சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற சூரஜ் சுனில்.
பகிர்:

இங்கிலாந்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தற்கலைக் கூட்டமைப்புகளின் ஒன்றியத்தின் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சூரஜ் சுனில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

பிரிட்டனின் கேட்விக் அருகே உள்ள கே2 கிராலியில் நடைபெற்ற சீனியர் கொபுடோ - பாரம்பரிய ஆயுதங்களைப் பயன்படுத்தும் தற்கலை பிரிவில் இந்தியாவின் சார்பில் ஒரேயொரு போட்டியாளராக சூரஜ் சுனில் கலந்துகொண்டார். அக். 10 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரஜ், தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.

30 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த சாம்பியன்ஷிப் தொடரில் ஜப்பான் இரண்டாவது இடத்தையும், பிரிட்டன் மூன்றாவது இடத்தையும் பிடிக்க, பாகிஸ்தான் 8-ஆவது இடத்தைப் பிடித்தது. உலக சாம்பியன்ஷிப் வெற்றியுடன், இந்தியாவின் சிறந்த மாஸ்டருக்கான 'பெஸ்ட் மாஸ்டர் விருது' சூரஜுக்கு வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

40 வயதான சென்செய் சூரஜ், ஷோட்டோகான் கராத்தேவில் ஏழாவது டான், அதாவது ஏழாம் நிலை கறுப்புப் பட்டம் பெற்றவர். ஏழு வயதில் தொடங்கி, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பயிற்சி, கற்பித்தல் மற்றும் தொடர்ந்த பயிற்சிச் சாதனையுடன் நீடிக்கும் அவரது தற்கலைப் பயணத்தில் இந்தத் தங்கப் பதக்கம் மற்றுமொரு முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த மறைந்த சென்செய் எஸ். மணியிடம் பயிற்சி பெற்ற சூரஜ், அதன் பின்னர் ஜப்பான், குவைத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற தற்கலை ஆசான்களிடமும் மேம்பட்ட பயிற்சி பெற்றார். SAKI India Foundation-ன் நிறுவனரான சூரஜ், இந்தியாவில் அந்த அமைப்பின் ஷோட்டோகான் பாணித் தலைவராகவும் செயல்படுகிறார்.

கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள திருப்பூணித்துறாவில் அவர் டோஜோ-தற்கலைப் பயிற்சிக்கூடம் நடத்தி வருகிறார். நிறுவனங்கள், மகளிர் குழுக்கள் மற்றும் பிற சமூகக் குழுக்களுக்குத் தற்காப்பு மற்றும் தற்கலைப் பயிற்சித் திட்டங்களையும் நடத்துகிறார். மாவட்ட, மாநில மற்றும் மண்டல அளவிலான சாம்பியன்ஷிப்-களில் வெற்றிகளைப் பெற்று, அவரது மாணவர்கள் கேரள மற்றும் தென்னிந்திய கராத்தே போட்டிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

summary

India's Suraj Sunil won the gold medal at the 4th World Championship of the World Self-Defence Federations Union, held in England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments