FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சுனில்குமார் வரலாற்று வெற்றி; மல்யுத்தத்தில் முதல் வெண்கலம்..! இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 60ஆக உயர்வு!

ஆசிய விளையாட்டு 2026ல் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் மல்யுத்த பதக்கம் குறித்து...

சுனில் குமார் - படம்: எக்ஸ் / ஒலிம்பிம் கேல்
பகிர்:

ஆசிய விளையாட்டு போட்டி 2026ல் இந்தியாவுக்கு மல்யுத்த பிரிவில் முதல் பதக்கம் கிடைத்துள்ளது. சுனில் குமார் கிரேக்க-ரோமானிய மல்யுத்தம் பிரிவில் முதல்முறையாக இரண்டு பதக்கம் வென்று (வெண்கலம்) வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

ஆடவருக்கான 87 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சுனில் குமார் பிலிப்பின்ஸின் ஜான்ஸ்டன் ரோபர்ட்ஸை 9-0 என தொழில் நுட்ப முறையில் வீழ்த்தினார்.

Advertisement

Advertisement

முன்னதாக 2022 ஆசிய விளையாட்டிலும் சுனில் குமார் வெண்கலம் வென்றிருந்தார். இத்துடன் 27 வயதாகும் சுனில் குமார் முதல் இந்தியராக கிரேக்க-ரோமானிய மல்யுத்தம் பிரிவில் இரண்டு முறையும் பதக்கம் வென்ற ஒரே இந்தியராக சாதனை படைத்துள்ளார்.

இந்தப் பதக்கத்துடன் இந்தியாவுக்கு 60 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதில் 10 தங்கம், 21 வெள்ளி, 29 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். இத்துடன் பதக்க பட்டியலில் இந்திய அணி 7ஆவது இடத்தில் நீடிக்கிறது.

summary

India’s first wrestling medal at the 2026 Asian Games comes from wrestler Sunil Kumar!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments