உயரம் தாண்டுதலில் தங்கம், வெள்ளி வென்ற இந்தியர்கள்!
ஆசிய பாரா விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய வீரர் பிரவீன் குமார் குறித்து...
ஆசிய பாரா விளையாட்டில் இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இது இந்தியாவுக்கு 11ஆவது தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
ஆடவருக்கான உயரம் தாண்டுதல் டி44/64 பிரிவில் இந்திய வீரர் பிரவீன் குமார் 2.05 மீட்டருக்குத் தாண்டி சாதனையுடன் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
Advertisement
Advertisement
மற்றுமொரு இந்திய வீரர் பன்டி 1.92 மீட்டருக்கு உயரம் தாண்டி வெள்ளி வென்றார். உஸ்பெகிஸ்தானின் டெமுர்பெக் கியாசோவ் 1.86 மீட்டருக்கு உயரம் தாண்டி வெண்கலம் வென்றார்.
சரியான போட்டியாக இருக்கும் என்பதால் டி64 மற்றும் டி64 பிரிவுகளுக்கான போட்டிகள் கலந்தே நடைபெறுகின்றன.
டி64 என்பது செயற்கை கீழ் மூட்டு உடன் ஓடுபவர்களையும் டி44 என்பது கீழ் மூட்டு குறைபாடுகள் கொண்டவர்கள் இரண்டு உடற்கூறியல் உறுப்புகள் உடன் செயற்கை மூட்டி இல்லாமல் ஓடுபவர்களையும் குறிக்கும் பிரிவுகள் என்பது நினைவுகூரத்தக்கது.
இந்தப் பிரிவில் பிரவீன் குமார் ஆசிய சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார். இத்துடன் இந்தியாவுக்கு 11 தங்கம் கிடைத்துள்ளன.
Praveen Kumar wins gold to lead India's 1-2 finish in men's high jump T44/64 event at Para Asiad
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.