ஆசிய பாரா விளையாட்டு: பேட்மிண்டனில் தங்கம் வென்றார் தமிழக வீரர் நவீன் சிவகுமார்!
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டனில் தமிழக வீரர் தங்கம் வென்றது குறித்து...
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் நவீன் சிவகுமார் தங்கம் வென்று அசத்தினார்.
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் கடந்த அக்.18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
இதில், கலந்துகொண்டு பதக்கங்களை வெல்லும் தமிழக வீரர்களுக்கு அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பேட்மிண்டன் ஆடவர் தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தோனேசிய வீரரை 21 - 9, 21 - 17 என்ற கணக்கில் தமிழக வீரர் நவீன் சிவகுமார் வீழ்த்தி, தங்கம் வென்றார்.
முன்னதாக, வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவில் நவீன் சிவகுமார் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
Para Asiad: Naveen Sivakumar Wins Badminton Gold
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.