ஜி.வி. பிரகாஷ் குமார் - மாளவிகா மனோஜ் நடிக்கும் புதிய திரைப்படம்!
அன்புடன் மகி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு.
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அன்புடன் மகி’. ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
Advertisement
Advertisement
2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
‘ஜோ’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஹரிஹரன் ராம் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிப்பதுடன், இந்தப் படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார்.
இதில் அவர் கிரிக்கெட் வீரராக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்காக அவர் தீவிரப் பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.
‘ஜோ’ படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த மாளவிகா மனோஜ் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், பிரேம்குமார், சபரீஷ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஹரி முனியப்பன், யூடியூப் பிரபலங்களான கார்த்திக் ராமதுரை, தனுஷ், தொகுப்பாளர் ராகேஷ் மற்றும் காவ்யா அறிவுமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தேனி ஈஸ்வர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சக்தி பிரணேஷ் படத்தொகுப்பையும், மீவின் வினோத் கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர்.
இந்த நிலையில், அன்புடன் மகி படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.