ராவடி படத்தின் முதல் பாடல் வெளியீடு!
ராவடி படத்தின் முதல் பாடல் வெளியானது குறித்து...
நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ராவடி படத்தின் முதல் பாடல் புதன்கிழமை (நவ. 4) வெளியானது.
சிறை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக கவனம் ஈர்த்த அக்ஷய் குமார் நாயகனாவும் அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்திலும் உருவான படம் ராவடி.
இப்படத்தில் பாசில் ஜோசப், ஜாஃபர், ஐஷ்வர்யா ஷர்மா, ஜான் விஜய், சத்யன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் படத்தின் முதல் பாடலான ’அட்ரா பரமா’ பாடல் இன்று வெளியாகியுள்ளது.
கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை பற்றி காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.