FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ராவடி படத்தின் வெளியீட்டுத் தேதி!

அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவான ராவடி படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து...

21 செப்டம்பர் 2026, 7:37 pm IST
அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவான ராவடி படத்தின் வெளியீட்டுத் தேதி.
பகிர்:

சிறை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக கவனம் ஈர்த்த அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவான ராவடி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் நடிகர்கள் பாசில் ஜோசப், அக்‌ஷய் குமார் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘ராவடி’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் லலித் குமார் தயாரித்துள்ளார்.

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜாஃபர், ஐஷ்வர்யா ஷர்மா, ஜான் விஜய், சத்யன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் நிறைவடைந்த நிலையில், பட வெளியீடு தள்ளிப்போனது.

கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை பற்றி காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற டிசம்பர் 24 அன்று வெளியாகவுள்ளது.

summary

The teaser of the film Rawadi starring Akshay Kumar has been released

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments