FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விளையாட்டு

யு-23 ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு 11 தங்கம் உள்பட 27 பதக்கம்

Updated On : 28 மே 2026, 6:41 am IST
பதக்கம் வென்ற இந்திய அணியினா்.
பகிர்:

டா நாங் : வியட்நாமில் நடைபெற்ற ஆசிய யு23 மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்தியா ப்ரீஸ்டைல் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது.

டா நாங் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் 11 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலத்துடன் ப்ரீஸ்டைல், மகளிா் மல்யுத்தம், கிரேக்கோ ரோமன் பிரிவுகளில் இந்திய அணியினா் பதக்கம் வென்றனா்.

கடைசி நாளான புதன்கிழமை அக்ஷய் தீரே 57 கிலோ, விக்கி 97 கிலோ, குமாா் மொஹித் 65கிலோ, சந்தா்மோகன் 79 கிலோ பிரிவில் தங்கம் வென்றனா். தீபக் ரதி 61 கிலோ, புனித் குமாா் 92 கிலோ, லேக்கி 125 கிலோ பிரிவில் வெள்ளியும், தீபக் 74 கிலோ, மொா் சச்சின் 82 கிலோ பிரிவில் வெண்கலமும் வென்றனா்.

Advertisement

Advertisement

மல்யுத்த வல்லரசுகளான கிா்ஜிஸ்தான், கஜகஸ்தானை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது, யு-23 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், இதே நகரில் யு17 பிரிவு போட்டியிலும் இந்திய அணியினா் சிறப்பிடம் பெறுவா் எனக்கருதப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments