சைலெட் டெஸ்ட்: 232-க்கு கட்டுப்பட்ட பாகிஸ்தான்
சைலெட் : வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியின் ஸ்கோருக்கு பாபர் ஆஸம் பிரதானமாகப் பங்களிக்க, வங்கதேச பெüலிங்கில் நஹித் ராணா, தைஜுல் இஸ்லாம் அசத்தினர்.
கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம், 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனது இன்னிங்ûஸ தொடங்கிய பாகிஸ்தான், முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது.
Advertisement
Advertisement
2}ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்த ஆட்டத்தில், அஸôன் அவைஸ் 3 பவுண்டரிகளுடன் 13, அப்துல்லா ஃபஸல் 1 பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷான் மசூது 2 பவுண்டரிகளுடன் 21, செüத் ஷகீல் 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு வெளியேற, அதிகபட்சமாக பாபர் ஆஸம் 10 பவுண்டரிகளுடன் 68 ரன்களுக்கு வீழ்ந்தார்.
தொடர்ந்து வந்தோரில் சல்மான் அகா 2 பவுண்டரிகளுடன் 21, முகமது ரிஸ்வான் 2 பவுண்டரிகளுடன் 13, ஹசன் அலி 3 பவுண்டரிகளுடன் 18, குர்ரம் ஷாஸôத் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 10 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர்.
லோயர் ஆர்டரில் வந்த சஜித் கான் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 38 ரன்கள் சேர்த்து வெளியேற, பாகிஸ்தான் இன்னிங்ஸ் 57.4 ஓவர்களில் 232 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.
வங்கதேச பெüலர்களில் நஹித் ராணா, தைஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா 3, மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
156 ரன்கள் முன்னிலை:
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் முன்னிலையுடன் 2}ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய வங்கதேசம், ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் சேர்த்து, மொத்தமாக 156 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
மஹ்முதுல் ஹசன் ஜாய் 10 பவுண்டரிகளுடன் 52, தன்ஸித் ஹசன் 4, மோமினுல் ஹக் 3 பவுண்டரிகளுடன் 30 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பாகிஸ்தான் பெüலர்களில் குர்ரம் ஷாஸôத் 2, முகமது அப்பாஸ் 1 விக்கெட் எடுத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.