முகப்பு
கிரிக்கெட்

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (அக்டோபர் 18) அறிவித்துள்ளது.

Updated On : 18 அக்டோபர் 2024, 7:42 pm IST
- படம் | இலங்கை கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (அக்டோபர் 18) அறிவித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் அண்மையில் நிறைவடைந்தது. டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (அக்டோபர் 18) அறிவித்துள்ளது.

ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி விவரம்

சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியநாகே, சதீரா சமரவிக்கிரம, நிஷான் மதுஷ்கா, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்‌ஷனா, ஜெஃப்ரி வாண்டர்சே, சமிந்து விக்கிரமசிங்க, அஷிதா ஃபெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்கா மற்றும் முகமது சிராஸ்.

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நாளை மறுநாள் (அக்டோபர் 20) தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments