இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜூன் 21) அறிவித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜூன் 21) அறிவித்துள்ளது.
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் வருகிற ஜூலை 1 முதல் தொடங்குகிறது. அதன் பின், ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
15 பேர் கொண்ட இந்திய அணியை ஷுப்மன் கில் கேப்டனாக வழிநடத்துகிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அணியில் சேர்க்கப்படவில்லை.
அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார். காயத்திலிருந்து மீண்டு வரும் அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்தகுதியைப் பொருத்தே போட்டிகளில் களமிறக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம்
ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல், இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், நிதீஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குர்னூர் பிரார்.
The BCCI announced the Indian squad for the ODI series against England today.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.