இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்ஷித் ராணா விலகியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்ஷித் ராணா காயம் காரணமாக விலகியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான டி20 தொடர் அண்மையில் நிறைவடைந்தது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. டி20 தொடர் நிறைவடைந்ததையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (ஜூலை 14) தொடங்குகிறது.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக ஹர்ஷித் ராணா விலகியுள்ளார்.
Advertisement
Advertisement
காயம் காரணமாக விலகியுள்ள ஹர்ஷித் ராணாவுக்குப் பதிலாக மாற்று வீரராக வேகப் பந்துவீச்சாளர் பிரின்ஸ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் என தொடர்ச்சியாக இரண்டு டி20 தொடர்களை இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.
Indian all-rounder Harshit Rana has withdrawn from the ODI series against England.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.