தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

11 பந்துகளில் அரைசதம்..! உலக சாதனையுடன் இலங்கையைப் பழிதீர்த்த சூர்யவன்ஷி!

இலங்கை ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் அசத்திய வைபவ் சூர்யவன்ஷி குறித்து...

Vaibhav Sooryavanshi

வைபவ் சூர்யவன்ஷி - படம்: பிசிசிஐ

Published On :

முத்தரப்பு அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷி 11 பந்துகளில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தார்.

டாஸ் வென்ற இலங்கை ஏ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தியா ஏ அணி பேட்டிங் செய்து வருகிறது. 28 ஓவர்கள் முடிவில் இந்தியா 221/3 ரன்கள் குவித்துள்ளது.

இந்தப் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி ருத்ர தாண்டவம் ஆடினார். 11 பந்துகளில் அரைசதம் (4,4,4,6,6,0,6,4,4,6,6) அடித்து உலக சாதனை படைத்தார். பின்னர், 29 பந்துகளில் 94 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தற்போது, களத்தில் திலக் வர்மா 42*, குமார் குஷாக்ரா 4* ரன்களுடன் விளையாடி வருகிறார்கள். இதற்கிடையில் ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்கள் அடித்து அசத்தினார்.

முன்னதாக, இந்தத் தொடரில் இந்தியா ஏ அணி இலங்கை ஏ அணியிடம் சூப்பர் ஓவரில் தோல்வியுற்றது. இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷியை இலங்கை அணியினர் ஏதோ திட்ட, அவர்களை நோக்கி பாய்ந்த சூர்யவன்ஷியின் விடியோ வைரலானது.

இலங்கை அணியினர் நடந்துகொண்ட விதத்துக்கு தற்போது அவர்களை சூர்யவன்ஷி பழிதீர்த்ததாக இந்திய ரசிகர்கள் குதூகலமாக இருக்கிறார்கள்.

Summary

Vaibhav Sooryavanshi 11 balls fifty revenge taken to srilankan A team

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.