முகப்பு
கிரிக்கெட்

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டியைக் காண தோனி வருகிறாரா?

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டியைக் காண இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வருகிறாரா என்பது குறித்து...

Updated On : 29 நவம்பர் 2025, 4:17 pm IST
எம்.எஸ்.தோனி - படம் |PTI
பகிர்:

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டியைக் காண இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வருவதற்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், ஒருநாள் தொடர் நாளை (நவம்பர் 30) முதல் தொடங்கவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை ராஞ்சியில் நடைபெறுகிறது. இந்த நிலையில், இப்போட்டியைக் காண இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ராஞ்சி திடலுக்கு வர வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இது தொடர்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கே.எல்.ராகுல் பேசியதாவது: நாம் அனைவரும் மகேந்திர சிங் தோனியைப் பார்த்து வளர்ந்துள்ளோம். இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியைக் காண அவர் திடலுக்கு வந்தால், ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய அணி வீரர்களும் மிகுந்த உற்சாகமடைவார்கள் என்றார்.

சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்த நிலையில், ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடரைக் கைப்பற்றும் நோக்கில் இந்திய அணி களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

summary

Former Indian captain Mahendra Singh Dhoni is reportedly likely to come to watch the first ODI between India and South Africa.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments