ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (அக்டோபர் 31) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
Advertisement
Advertisement
முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 19.3 ஓவர்கள் முடிவில் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ராஸா 32 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டோனி முனியோங்கா 19 ரன்களும், பிரையன் பென்னட் 16 ரன்களும் எடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் ரஷித் கான் 3 ஓவர்களில் வெறும் 9 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முஜீப் உர் ரஹ்மான் மற்றும் அப்துல்லா அகமதுசாய் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஃபரீத் அகமது மாலிக் மற்றும் முகமது நபி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
தொடரைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்
126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 18 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது.
ஆப்கானிஸ்தான் அணியில் இப்ராஹிம் ஸத்ரான் அரைசதம் கடந்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவர் 51 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அஸ்மதுல்லா ஓமர்சாய் அதிரடியாக 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். டார்விஸ் ரஷூலி 17 ரன்களும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 16 ரன்களும் எடுத்தனர்.
ஜிம்பாப்வே தரப்பில் பிராட் ஈவன்ஸ் 2 விக்கெட்டுகளையும், வெலிங்டன் மஸகட்ஸா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரஷித் கானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
Afghanistan won the second T20I against Zimbabwe by 7 wickets.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.