முகப்பு
கிரிக்கெட்

அதிரடி சதமடித்து சல்யூட்..! பயிற்சியாளருக்குச் சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!

ஆட்ட நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சனின் பேட்டி குறித்து...

Updated On : 12 ஏப்ரல் 2026, 11:45 am IST
சதம் அடித்த மகிழ்ச்சியில் சஞ்சு சாம்சன். - ஏபி
பகிர்:

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 115* ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்ட சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தினார்.

இந்தப் போட்டியில் சதமடித்த போது ஓய்வறையை நோக்கி சல்யூட் அடிப்பது போல செய்வார். இதற்கு காரணம் பயிற்சியாளர் என விருது வென்ற பிறகு சாம்சன் பேசியது சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.

நேற்றிரவு சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 212/2 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தில்லி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆட்ட நாயகன விருது வென்ற சஞ்சு சாம்சன் பேசியிருப்பதாவது:

Advertisement

Advertisement

புதிய அணிக்கு வந்ததுபோல் இல்லை. இரண்டாவது வீடு போலவே இருக்கிறது. அனைவருமே நன்றாக பழகுகிறார்கள். மூன்று தோல்விகளுக்குப் பிறகு கூட 50 நொடிகள்தான் மீட்டிங் நடந்தது.

நான் சதமடித்து சல்யூட் அடித்தது பயிற்சியாளர் பிளெமிங்கிற்குதான். இந்தப் போட்டிக்கு முன்பாக அவருக்கு எவ்வளவு அழுத்தம் இருந்தது எனத் தெரியும். ஐந்து ஆண்டுகளாக ஒரு அணியை வழிநடத்துவது எவ்வளவு கடினம் என்பது தெரியும். அதனால், அவருக்குச் சமர்ப்பிக்கத் தோன்றியது என்றார்.

இந்தப் போட்டிக்கு முன்னதாக பயிற்சியாளர் பிளெமிங், “ ஐபிஎல் தொடரில் வேறு ஒரு அணிக்காக (ராஜஸ்தான் ராயல்ஸ்) விளையாடிவிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைவதற்கு சஞ்சு சாம்சனுக்கு சிறிது நேரம் தேவைப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 5 அல்லது 6 மாற்றங்கள் நடந்துள்ளன. அதனால், இப்போதிருப்பது பழைய சிஎஸ்கே அணி கிடையாது. களத்துக்கு வெளியே வீரர்களுக்கு இடையே நிறைய பிணைப்பு தேவைப்படுகிறது.

மூத்த வீரர்களுடன் இணைந்து அணிக்காக ரன்கள் குவிக்க வேண்டுமென்பதில் சஞ்சு சாம்சன் உறுதியாக இருக்கிறார். டி20 உலகக் கோப்பைத் தொடரில் அவர் எப்படி விளையாடினார் என்பதை நாம் பார்த்தோம். ரன்கள் குவிக்கத் தொடங்கிவிட்டால், சஞ்சு சாம்சன் மிகவும் அபாயகரமான வீரராக இருப்பார். அதனால், அவருக்கு தொடர்ந்து ஆதரவளித்து நம்பிக்கையை கொடுத்தால் அதுவே போதுமானது” எனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.