முகப்பு
கிரிக்கெட்

மும்பை பந்துவீச, சிஎஸ்கே பேட்டிங்: இந்தப் போட்டியிலும் தோனி இல்லை!

வான்கடேவில் நடைபெறும் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் போட்டி குறித்து...

Updated On : 23 ஏப்ரல் 2026, 7:08 pm IST
மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணியினர். - படம்: ஐபிஎல்
பகிர்:

மும்பை வான்கடே திடலில் நடைபெறும் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகள் (5) வென்ற அணிகளாக சிஎஸ்கே அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் இருக்கின்றன. ஆறாவது கோப்பையை யார் வெல்லுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இரு அணிகளின் ரசிகர்களிடமும் இருக்கிறது.

சிஎஸ்கே அணி ருதுராஜ் கேப்டன்சியில் தடுமாறி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹார்திக் பாண்டியா கேப்டன்சியில் தொடர்ச்சியாக தோல்வியுற்று கடைசி போட்டியில்தான் வலுவான கம்பேக் அளித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் வெல்லும் அணி பிளேஆஃப்ஸுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு அதிகமிருக்கிறது என்பதால் ஐபிஎல் ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ்: டி காக், அஷ்வனி குமார், நமன் திர், சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, திலக் வர்மா, ஷெர்பானே ரூதர்போர்டு, மிட்செல் சான்ட்னர், கிரிஸ் பகத், ஜஸ்ஃப்ரீத் பும்ரா, அல்லாஹ் கஜன்ஃபர்.

சிஎஸ்கே: ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, டெவால்டு பிரெவிஸ், சர்ஃபராஸ் கான், கார்திக் சர்மா, அன்ஷுல் கம்போஜ், ஜேமி ஓவர்டன், நூர் அகமது, முகேஷ் சௌதரி, குர்ஜப்நீத் சிங்.

சிஎஸ்கே இம்பாக்ட் வீரர்களில் பிரசாந்த் வீர், மேத்யூ ஷார்ட், மாட் ஹென்றி, அகீல் ஹொசைன், உர்வில் படேல் இருக்கிறார்கள்.

summary

CSK vs Mumbai Clash: Mumbai Indians have won the toss and have opted to field

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments