முகப்பு
கிரிக்கெட்

பலம் வாய்ந்த ஆர்சிபியுடன் மோதும் குஜராத்: சாய் கிஷோருக்கு வாய்ப்பு கிடைக்குமா?

ஐபிஎல் 2026 சீசனில் 34ஆவது போட்டி குறித்து...

Updated On : 24 ஏப்ரல் 2026, 4:28 pm IST
ஆர்சிபி, குஜராத் அணி வீரர்கள். - படம்: எக்ஸ் / ஐபிஎல்
பகிர்:

ஐபிஎல் 2026 சீசனில் 34ஆவது போட்டியில் ஆர்சிபியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் இன்றிரவு 7.30 மணிக்கு சின்னசாமி திடலில் மோதுகின்றன.

புள்ளிப் பட்டியலில் 7-ஆவது இடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இந்தப் போட்டி முக்கியமானதாக இருக்கிறது. இதில் குஜராத் வென்றால், புள்ளிப் பட்டியலில் 3 முதல் 5-ஆவது இடங்களுக்குள் முன்னேறும் வாய்ப்பிருக்கிறது.

கடந்த சீசனில் சிறப்பாக பந்துவீசிய சாய் கிஷோருக்கு இந்த சீசனில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. காயம் காரணமா அல்லது பிளேயிங் லெவனில் சமநிலை இருப்பதாலா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை 25 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் குஜராத் அணி மூன்றில் தோவியடைந்துள்ளதால், பிளேயிங் லெவனில் குறைந்தபட்சம் 2 மாற்றங்களாவது வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, இந்த சீசனிலும் பலம்வாய்ந்த அணியாகவே இருக்கிறது. இந்த பவர்பிளேவில் ககிசோ ரபாடா அதிக விக்கெட்டுகள் (7) எடுத்துள்ளார்.

ஆர்சிபிக்கு எதிராக ஜாஸ் பட்லர் தனது கடைசி 5 போட்டிகளில் 2 முறை டக் அவுட்டாக, 2 முறை சதம் அடித்தும் அசத்தியுள்ளார்.

குஜராத் அணிக்கு எதிராக முன்னாள் கேப்டன் விராட் கோலி சராசரியாக 87.75 ரன்கள் அடிக்கிறார் என்ற புள்ளிவிவரங்கள் சுவாரசியத்தை ஏற்படுத்துகின்றன.

summary

Will Gujarat Defeat the Mighty RCB? Changes in the Playing XI? Will Sai Kishore get an opportunity?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments