முகப்பு
கிரிக்கெட்

சதத்தை தவறவிட்ட சூர்யவன்ஷி: குஜராத் அணிக்கு 215 ரன்கள் இலக்கு

குஜராத் அணிக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் சூர்யவன்ஷி அதிரடியால் ராஜஸ்தான் அணி 214 ரன்கள் குவித்தது.

சூர்யவன்ஷி
பகிர்:

குஜராத் அணிக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் சூர்யவன்ஷி அதிரடியால் ராஜஸ்தான் அணி 214 ரன்கள் குவித்தது.

ஐபிஎல் தொடரில் நியூ சண்டீகரில் இன்று (மே 29) நடைபெறும் குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் சாய் கிஷோர் சேர்க்கப்பட்டுள்ளார். தொடக்க பேட்டர்களாக ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி ஆகியோர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் ஒரு ரன்னில் வெளியேற மறுபுறம் சூர்யவன்ஷி ஆட்டத்தில் அனல் பறந்தது.

Advertisement

Advertisement

அவரைக் குஜராத் பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிரடியாக விளையாடிய அவர் நூலிழையில் தனது சதத்தை தவறவிட்டார். 47 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 சிக்ஸர்கள் அடங்கும். அடுத்து வந்த வீரர்களில் ஜடேஜா, டோனவன் ஃபெரீரா ஆகியோர் மட்டுமே சொல்லிக்கொள்ளும்படி ஆடினர்.

ஜடேஜா 45(35 பந்துகள்) ரன்களுடனும், ஃபெரீரா 38(11 பந்துகள்) ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. குஜராத் தரப்பில் ரபாடா, ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

summary

Rajasthan posted a mammoth 214 against Gujarat in a key clash, thanks to Suryavanshi's explosive knock.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.