முகப்பு
கிரிக்கெட்

ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் அபாரம்; 75 ரன்களுக்கு ஆட்டமிழந்த தில்லி கேபிடல்ஸ்!

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Updated On : 27 ஏப்ரல், 2026 at 9:46 PM
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆர்சிபி வீரர்கள் - படம் | ஐபிஎல் (எக்ஸ்)
பகிர்:

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஐபிஎல் தொடரில் தில்லியில் உள்ள அருண் ஜெட்லி திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தில்லி கேபிடல்ஸ் முதலில் விளையாடியது.

Advertisement

ஜோஷ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் அபாரம்; 75 ரன்களுக்கு ஆட்டமிழந்த தில்லி கேபிடல்ஸ்!

முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 16.3 ஓவர்களில் 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தில்லி கேபிடல்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் உள்ள முதல் 6 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். சஹில் பராக் (0 ரன்), கே.எல்.ராகுல் (ஒரு ரன்), நிதீஷ் ராணா (ஒரு ரன்), சமீர் ரிஸ்வி (0 ரன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (5 ரன்கள்), அக்‌ஷர் படேல் (0 ரன்) எடுத்து ஆட்டமிழந்தனர். பவர்பிளே முடிவில் தில்லி கேபிடல்ஸ் 13 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

அதன் பின், டேவிட் மில்லர் மற்றும் அபிஷேக் போரெல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த இணை ஓரளவுக்கு அணியின் ஸ்கோரை உயர்த்தியது. டேவிட் மில்லர் 18 பந்துகளில் 19 ரன்களும் (3 பவுண்டரிகள்) , அபிஷேக் போரெல் 33 பந்துகளில் 30 ரன்களும் (3 பவுண்டரிகள்) எடுத்தனர். கைல் ஜேமிசன் 12 ரன்கள் எடுத்தார்.

ஆர்சிபி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஷ் ஹேசில்வுட் 3.3 ஓவர்களில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். புவனேஷ்வர் குமார் 3 ஓவர்களில் வெறும் 5 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ராசிக் சலாம் தர், சூயாஷ் சர்மா மற்றும் க்ருணால் பாண்டியா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது.

summary

In the IPL match against Royal Challengers Bangalore, Delhi Capitals, batting first, were all out for 75 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.