தோனி, ரோஹித் வரிசையில் இணைந்த ரஜத் படிதார்!
ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கேப்டன்களின் வரிசையில் ரஜத் படிதாரும் இணைந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கேப்டன்களின் வரிசையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதாரும் இணைந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் நேற்றுடன் நிறைவடைந்தது. அகமதாபாதில் நேற்று (மே 31) நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
ஐபிஎல் தொடரில் இதற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் தொடர்ச்சியாக இரண்டு முறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளனர். அந்த வரிசையில் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதாரும் இணைந்துள்ளார்.
மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளுக்கான சாம்பியன் பட்டம் வென்று இந்த சாதனைப் பட்டியலில் தற்போது இணைந்துள்ளது.
Rajat Patidar has joined the ranks of captains who have won the IPL title twice consecutively.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.