முகப்பு
கிரிக்கெட்

0-4ல் தொடங்கி டாப்4ல் முடித்த ஹைதராபாத் கிங்ஸ்மேன்..! கேப்டனாக சாதித்த மார்னஸ் லபுஷேன்!

பிஎஸ்எல் தொடரில் கேப்டனாக அறிமுகமாகி அசத்திய மார்னஸ் லபுஷேன் குறித்து...

Updated On : 29 ஏப்ரல் 2026, 3:26 pm IST
வெற்றிக் களிப்பில் ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணியினர். - படங்கள்: இன்ஸ்டா / மார்னஸ் லபுஷேன்.
பகிர்:

பிஎஸ்எல் தொடரில் கேப்டனாக அறிமுகமாகிய மார்னஸ் லபுஷேன் அவரது தலைமையிலான ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணியை பிளே ஆப்ஸுக்கு முன்னேற்றியுள்ளார்.

முதல்முறையாக பிஎஸ்எல் தொடரில் விளையாடும் மார்னஸ் லபுஷேன் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பின்னர், தனது புத்திசாலிதனமாக தலைமைப் பண்பினால் அணியை டாப் 4 இடத்துக்குக் கொண்டு வந்தார்.

பாகிஸ்தானில் நடைபெறும் பிஎஸ்எல் தொடரில் ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணி இந்தமுறை புதியதாக அறிமுகமாகியது. இந்த அணிக்கு கேப்டனாக ஆஸ்திரேலியாவின் நட்சத்திர டெஸ்ட் கிரிக்கெட்டர் மார்னஸ் லபுஷேன் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

முதல் நான்கு போட்டிகளில் தோல்வியடைந்த இந்த அணியையும் மார்னஸ் லபுஷேனையும் பாகிஸ்தான் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாக கிண்டல் செய்தார்கள்.

மொத்தம் 10 போட்டிகளில் முதலிலேயே 4ல் தோல்வியுற்ற இந்த அணி கடைசியில் 5 போட்டிகளில் வென்று, பிளே ஆஃப்ஸுக்கு முன்னேறியது. இன்று மாலை முல்தான் சுல்தான்ஸ் அணியுடன் எலிமினேட்டர் 1ல் மோதுகிறது.

இதில் வெற்றிபெறும் அணி எலிமினேட்டர் 2ல் வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத் யுனைடெட் அணியுடன் மோதுகிறது. இந்த நிலையில், இது குறித்து மார்னஸ் லபுஷேன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பிஎஸ்எல் தொடரில் முதல்முறையாக அறிமுகமாகியதில் இருந்து இது ஒரு மறக்க முடியாத பயணமாக இருந்துள்ளது. முதலில் 0-4ல் இருந்து தொடங்கி பின்னர் டாப் 4ல் முடித்திருக்கிறோம். இன்னும் வேலை முடிவடையவில்லை எனக் கூறியுள்ளார்.

summary

Hyderabad Kingsmen: Starting at 0-4, Finishing in the Top 4! Marnus Labuschagne Achieves Success!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.