FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெளியேற்றம்: மகிழ்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெளியேற்றமும் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சிக்குமான காரணங்கள் குறித்து...

நிதீஷ் குமார் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜடேஜா. - படம்: எக்ஸ் / ஐபிஎல்
பகிர்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியுற்று வெளியேறியதால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

நேற்றிரவு நடந்த எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 243/8 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் 19.2 ஓவர்களில் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தப் போட்டியில் தோல்வியுற்றதால் சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. சமூக வலைதளத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் இஷான் கிஷனையும் அந்த அணியையும் டேக் செய்து பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement

Advertisement

இந்தளவுக்கு சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாட காரணம் கடைசியாக சேப்பாக்கில் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வென்றது. அந்தப் போட்டியில் இஷான் கிஷன் சிஎஸ்கே ரசிகர்களைப் பார்த்து, “வீட்டிற்குச் செல்லுங்கள்” என விசில் அடித்து கேலி செய்தார்.

இந்தக் காரணத்தினால், தற்போது சன்ரைசர்ஸ் அணி தோல்வியுற்றதும் இஷான் கிஷனை சிஎஸ்கே ரசிகர்கள் “வீட்டிற்குச் செல்லுங்கள்” என்றும் ”கர்மா சும்மா விடாது” என்று விசில் அடித்து கேலி செய்து வருகிறார்கள்.

மாறாக, சூர்யவன்ஷி தோனியிடம் ஆசிர்வாதம் பெற்றதையும் ஒப்பிட்டு கிரிக்கெட் வீரர்களுக்குப் பணிவு வேண்டும் எனவும் கூறி வருகிறார்கள்.

summary

Sunrisers Hyderabad Eliminated: CSK Fans Rejoice!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments