338% சம்பள உயர்வு..! கிளாசனின் வாழ்க்கையை மாற்றிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அசத்தும் கிளாசன் குறித்து...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஹென்ரிச் கிளாசன் (34 வயது) சிறப்பாக விளையாடி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
வான்கடேவில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 243/5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 18. 4 ஓவர்களில் 249/4 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கிளாசன் 30 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அசத்தினார். மிடில் ஓவரில் அசத்திய இவருக்கு ஆட்ட நாயகன் விருது வென்றார்.
Advertisement
Advertisement
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கிளாசனுக்கு 2023-24 சீசனில் ரூ.5.25 கோடி சம்பளம் வழங்கப்பட்டது. பின்னர், 2025-26 சீசனில் தக்கவைக்கப்பட்ட கிளாசனுக்கு ரூ.23 கோடி வழங்கப்பட்டது. இதன் மூலமாக அவருக்கு 338 சதவிகிதம் சம்பள உயர்வு கிடைத்துள்ளது.
இந்தக் காரணத்தினால் கிளாசன், “சன்ரைசர்ஸ் எனது வாழ்க்கையை மாற்றியது. எனது குடும்பத்திற்காக உழைக்கிறேன்” என முன்னதாகக் கூறியிருந்தார். தற்போது அவரது வார்த்தையை மெய்ப்பித்து வருகிறார்.
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான ஆரஞ்சு கேப் பட்டியலில் அவரும் இடம்பெற்றுள்ளார். பொதுவாக டாப் ஆர்டர் பேட்டர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு அமையும் என்ற நிலையில் மிடில் ஆர்டர் பேட்டராக இருந்து அவரும் இந்தப் பட்டியலில் இருப்பது மிகப்பெரிய சாதனையாக இருக்கிறது.
இதுவரை இந்த சீசனில் சதம் அடிக்காவிட்டாலும் 4 அரைசதங்கள் உள்பட 9ல் ஒரு போட்டியைத் (29 ரன்கள்) தவிர அனைத்து போட்டிகளிலும் 30+ ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார்.
நேற்று, ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஒரு பந்தை அவர் அடித்த விதம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தற்போது, ஆரஞ்ச் கேப் பட்டியலில் 11 ரன்கள் வித்தியாசத்தில் 2ஆவது இடத்தில் இருக்கிறார்.
ஐபிஎல் 2026: ஆரஞ்ச் கேப் பட்டியல்
1. அபிஷேக் சர்மா - 425 ரன்கள் (தொடக்க வீரர்)
2. ஹென்ரிச் கிளாசன் - 414 ரன்கள் (மிடில் ஆர்டர்)
3. வைபவ் சூர்யவன்ஷி - 400 ரன்கள் (தொடக்க வீரர்)
4. கே.எல். ராகுல் - 358 ரன்கள் (தொடக்க வீரர்)
5. விராட் கோலி - 351 ரன்கள் (தொடக்க வீரர்)
Sunrisers Hyderabad changed my life says and proved by Heinrich Klaasen
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.