மூவர் அரைசதம் விளாசல்; ஆர்சிபிக்கு 256 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
Advertisement
Advertisement
மூவர் அரைசதம் விளாசல்; ஆர்சிபிக்கு 256 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் மற்றும் ஹென்ரிச் கிளாசன் மூவரும் அரைசதம் விளாசி அசத்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் 46 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அபிஷேக் சர்மா 22 பந்துகளில் 56 ரன்களும் (4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்), ஹென்ரிச் கிளாசன் 24 பந்துகளில் 51 ரன்களும் (2 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) எடுத்தனர். நிதீஷ் குமார் ரெட்டி 29 ரன்கள், டிராவிஸ் ஹெட் 26 ரன்கள் எடுத்தனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தரப்பில் ராஷிக் சலாம் தர் இரண்டு விக்கெட்டுகளையும், சூயாஷ் சர்மா மற்றும் க்ருணால் பாண்டியா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூ அணி களமிறங்குகிறது.
Batting first in the IPL match against Royal Challengers Bangalore, Sunrisers Hyderabad scored 255 runs for the loss of 4 wickets.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.