அன்புடன் சென்னை.. ஆப்கனில் விளையாடியது போன்ற உணர்வு.. ரஷீத்கான் நெகிழ்ச்சி!
சொந்த மண்ணிலேயே விளையாடியது போன்ற உணர்வைக் கொடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத்கான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளதைப் பற்றி...
ூசென்னை, தில்லி, அகமதாபாத் உள்ளிட்ட திடலில் கிடைத்த மிகப் பெரிய ஆதரவு சொந்த மண்ணிலேயே விளையாடியது போன்ற உணர்வைக் கொடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத்கான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
10-வது ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் சூப்பர் -8 சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளன.
கடந்த முறை அரையிறுதி வரை முன்னேறிய ஆப்கானிஸ்தான் அணி இந்தத் தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறியது. லீக் சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அட்டக்காசமாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி இரண்டு சூப்பர் ஓவர்களுடன் நூலிழையில் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பைத் தவறவிட்டது.
Advertisement
Advertisement
இருப்பினும், சென்னை, தில்லி, அகமதாபாத் என இந்தியாவில் நடைபெற்ற அனைத்துத் திடல்களிலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு மிகப் பெரிய ஆதரவு கிடைத்தது.
இது குறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத்கான் கூறுகையில், “டி20 உலக கோப்பை தொடரின்போது இந்தியா முழுவதும் ரசிகர்கள் கொடுத்த அன்பு, எப்போதும் எங்கள் மனதில் நிலைத்திருக்கும்.
அகமதாபாத், சென்னை, தில்லி உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஏராளமானோர் எங்களுக்கு அமோக ஆதரவு அளித்தனர். இது சொந்த மண்ணான ஆப்கானிஸ்தானில் விளையாடியது போன்ற உணர்வை கொடுத்தது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.