முகப்பு
கிரிக்கெட்

சிக்கந்தர் ராஸா அரைசதம் விளாசல்; தென்னாப்பிரிக்காவுக்கு 154 ரன்கள் இலக்கு!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே 153 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 1 மார்ச், 2026 at 4:52 PM
அரைசதம் விளாசிய மகிழ்ச்சியில் சிக்கந்தர் ராஸா - படம் | AP
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 4:31 PM

டி20 உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே 153 ரன்கள் எடுத்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றில் தில்லியில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

Advertisement

Updated On : 1 மார்ச், 2026 at 4:47 PM

சிக்கந்தர் ராஸா அதிரடி; 154 ரன்கள் இலக்கு!

டாஸ் வென்று முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்துள்ளது.

ஜிம்பாப்வே தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களான மருமானி 7 ரன்கள், பிரையன் பென்னட் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின், டியான் மையர்ஸ் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய கேப்டன் சிக்கந்தர் ராஸா அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 43 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். கிளைவ் மடாண்ட்டி 26 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

Updated On : 1 மார்ச், 2026 at 4:47 PM

தென்னாப்பிரிக்கா தரப்பில் குவெனா மபாகா மற்றும் கார்பின் பாஷ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜார்ஜ் லிண்டே, லுங்கி இங்கிடி மற்றும் ஆண்ட்ரிச் நோர்க்கியா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி களமிறங்குகிறது.

summary

Zimbabwe, batting first, scored 153 runs in their Super 8 round match against South Africa in the T20 World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.