FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா போராட்டம் வீண்: உலகக் கோப்பையில் 2-ஆவது தோல்வி!

ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பையின் 11-ஆவது போட்டி குறித்து...

Updated On : 18 ஜூன் 2026, 3:23 pm IST
பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா. - படம்: ஏஎஃப்பி
பகிர்:

ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பையின் 11-ஆவது போட்டியில் பாகிஸ்தானும் தென்னாப்பிரிக்காவும் பிர்மிங்கமில் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக அணியின் கேப்டன் ஃபாத்திமா சனா 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென்னாப்பிரிக்கா சார்பில் மரிசான் காப் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அடுத்து பேட்டிங் விளையாடிய இந்த அணி 16.5 ஓவர்களில் 127/8 ரன்கள் எடுத்து வென்றது.

Advertisement

Advertisement

அதிகபட்சமாக அன்னரி டெர்க்ஸன் 52 ரன்கள் குவித்தார். நடினே டி கிளார்க் 37 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். பாகிஸ்தான் சார்பில் ஃபாதிமா சனா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

ஃபாத்திமா சனா பேட்டிங், பந்துவீச்சில் தனியாளாகப் போராடினார். இருந்தும், பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது போட்டியிலும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

குரூப் ஏ புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றன.

summary

Pakistan captain Fatima Sana's fighting effort goes in vain; South Africa secures a stunning victory! T20 world cup

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments