முகப்பு
கிரிக்கெட்

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான்!

ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

Updated On : 2 மார்ச் 2026, 7:05 pm IST
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் - படம் | ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இதற்கான அட்டவணையை பிசிசிஐ இன்று (மார்ச் 2) வெளியிட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி முதலில் நடைபெறுகிறது. அதன் பின், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்குகிறது. டெஸ்ட் போட்டி சண்டீகரில் ஜூன் 6 ஆம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடர் ஜூன் 14 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

Advertisement

Advertisement

இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 6 ஆம் தேதி தொடங்கி ஜூன் 10 வரை சண்டீகரில் நடைபெறும்.

ஒருநாள் தொடர் வருகிற ஜூன் 14 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் ஜூன் 14 ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி ஜூன் 17 ஆம் தேதி லக்னௌவிலும், மூன்றாவது போட்டி ஜூன் 20 ஆம் தேதி சென்னையிலும் நடைபெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான சண்டீகரில் நடைபெறும் டெஸ்ட் போட்டி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தரவரிசைப் பட்டியலுக்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

summary

The Afghanistan team will tour India to play ODI and Test series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.