இதயங்களை உடைத்தாலும் கவலையில்லை..! இறுதிப் போட்டி குறித்து சான்ட்னர்!
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி குறித்து நியூசிலாந்து கேப்டன் பேசியிருப்பதாவது...
டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் பல கோடிக்கணக்கான இதயங்களை உடைத்தாலும் கவலையில்லை என நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் நாளை (மார்ச் 8) இரவு 7 மணிக்கு அகமதாபாதில் நரேந்திர மோடி கிரிக்கெட் திடலில் விளையாடுகிறது.
இந்தப் போட்டி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் பேசியிருப்பதாவது:
Advertisement
Advertisement
டி20 உலகக் கோப்பைக்கு முன்பாகவே இந்தியாவில் விளையாடி இருக்கிறோம். அது எங்களுக்கு நன்றாகவே இருந்தது. அதனால், நாளை என்ன நடக்கப்போகிறது என்பதில் எந்த ரகசியமும் இல்லை. ஆனால், உலகக் கோப்பை இறுதிப்போட்டி என்பதால் ஆர்வம் மிகுதியாக இருக்கிறது.
இன்னும் பிட்சைப் பார்க்கவில்லை. ஆனால், தட்டையான பிட்ச்சாக இருக்கும். அதிக ரன்களைக் குவிக்கும்படி இருக்குமென நினைக்கிறேன். பும்ரா குறித்துதான் அனைவரும் பேசிவருகிறார்கள். அந்தளவுக்கு அவர் சிறப்பாக விளையாடியுள்ளார்.
நாங்கள் இங்கு பிடித்தமானவர்களாக இருக்கமாட்டோம். ஆனால், அது குறித்து கவலையில்லை. சிறிய விஷயங்களை சரியாக செய்தால் கோப்பையை வெல்வோம். கோப்பையை வெல்வதற்காக சில இதயங்களை உடைத்தாலும் கவலையில்லை எனக் கூறியுள்ளார்.
இந்திய அணி நியூசிலாந்தை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4-1 என அபாரமாக வென்றது குறிப்பிடத்தக்கது.
2019 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்வியுற்றதுக்கு இந்திய அணி நியூசிலாந்தை பழிவாங்குமா அல்லது டி20 தொடரில் தோற்றதுக்கு இந்தியாவை நியூசிலாந்து பழிவாங்குமா என்ற சுவாரசியமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
T20 World Cup 2026: I don't mind breaking a few hearts to win the trophy, Santner sends India a warning ahead of the final.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.