முகப்பு
கிரிக்கெட்

வருண் சக்கரவர்த்தி செய்ய வேண்டியது என்ன? பியூஷ் சாவ்லா அறிவுரை!

முன்னாள் இந்திய சுழல்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா பேசியிருப்பதாவது...

Updated On : 7 மார்ச் 2026, 2:30 pm IST
வருண் சக்கரவர்த்தி. - படம்: ஏபி
பகிர்:

நடப்பு டி20 உலகக் கோப்பையில் தடுமாறிவரும் இந்திய வீரர் வருண் சக்கரவர்த்திக்கு முன்னாள் இந்திய சுழல்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா அறிவுரை வழங்கியுள்ளார்.

வருண் சக்கரவர்த்தி தனது பந்துவீச்சில் ஒன்று மிகவும் கிட்டதாக அல்லது மிகவும் தூரமாக பந்துவீசுவதான் பிரச்னையாக இருக்கிறது எனப் பேசியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி 1 விக்கெட் எடுத்து, 64 ரன்கள் கொடுத்தார். அதற்கு முன்பாகவும் சில போட்டிகளில் மோசமாக பந்துவீசினார்.

Advertisement

Advertisement

இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நரேந்திர மோடி திடலில் நடைபெற இருக்கும் நிலையில், முன்னாள் வீரர் பியூஷ் சாவ்லா இது குறித்து ஜியோஸ்டார் நிகழ்ச்சியில் பேசியுள்ளதாவது:

நம்பிக்கை இழந்த நிலையில் அல்லது பலதும் செய்து பார்க்கிற மாதிரி செய்தால், ஒன்று பந்து ஃபுல்லராக (பேட்டருக்கு அருகில்) அல்லது ஷார்ட் (பேட்டருக்கு மிக தூரம்) பந்துகளாக அமைந்துவிடும். அப்படித்தான் தற்போது, வருணுக்கு அமைந்திருக்கிறது.

வருண் சக்கரவர்த்தியின் பலமே சரியான நீளத்தில் பந்துவீசுவதுதான். வேகப் பந்துவீச்சாளர்களை விட சுழல்பந்து வீச்சாளர்களுக்கு குட்லெந்தில் (6-8 மீ) பந்துவீச வேண்டும். மேலும் பந்தின் உயரம் முழங்கால் அளவுக்கு இருக்குமாறு வீச வேண்டும்.

வருண் சக்கரவர்த்தி வேகமாகப் பந்துவீசுவதால், பேட்டர்களால் அவரது கையில் இருந்து பந்தினை கணிக்க முடியாது. அவர் வீசும் பந்து பிட்சில் பட்டு வேகமாக வரும்.

சில போட்டிகளாக வருண் சக்கரவர்த்தி அதிகமாக கவனிக்கப்படுவதால், அவரது பந்துவீச்சில் தடுமாற்றம் இருக்கிறது. பிட்சில் பவுன்ஸ் இருப்பதால், பேட்டர்களால் அவர் வீசும் ஃபுல் அல்லது ஷார்ட் பந்துகள் எளிதானதாக மாறியிருக்கிறது என்றார்.

summary

Varun Chakaravarthy bowled too full or too short: Chawla

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments