சர்வதேச டி20 போட்டிகளில் வரலாறு படைத்த ஹர்மன்பிரீத் கௌர்!
சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் புதிய வரலாறு படைத்துள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் மான்செஸ்டரில் இன்று (ஜூன் 21) நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 158 ரன்கள் எடுக்க, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டி இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் விளையாடும் 200-வது சர்வதேச டி20 போட்டியாகும். சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 200-வது போட்டியில் விளையாடும் முதல் நபர் (ஆடவர்/ மகளிர்) என்ற வரலாற்றுச் சாதனையை ஹர்மன்பிரீத் கௌர் படைத்துள்ளார்.
200-வது சர்வதேச டி20 போட்டியில் விளையாடும் அவரை கௌரவிக்கும் விதமாக 200 என்ற எண் பொறிக்கப்பட்ட இந்திய அணியின் ஜெர்சியை துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா அவருக்கு வழங்கி கௌரவித்தார்.
இதுவரை இந்திய அணிக்காக 200 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்மன்பிரீத் கௌர் 4147 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 17 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 103.
ஹர்மன்பீரீத் கௌர் அவரது 200-வது சர்வதேச டி20 போட்டியில் 24 ரன்கள் எடுத்தார்.
Indian team captain Harmanpreet Kaur has created history in international T20 matches.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.