சொந்த மண்ணில் தோல்வியடைந்த ஹைதராபாத் அணி! கொல்கத்தா வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றிபெற்றது குறித்து...
ஹைதராபாதில் ராஜீவ் காந்தி சர்வதேச விளையாட்டுத் திடலில் நடந்த 45 ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது.
2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் இன்றைய முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து களமிறங்கிய நிலையில், 19 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்திருந்தது.
Advertisement
Advertisement
இதனையடுத்து, களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
ஹைதராபாத் அணியில் அதிரடியாக விளையாடிய ட்ராவிஸ் ஹெட் 28 பந்துகளில் 61 ரன்களை விளாசினார். கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக அங்க்ரிஷ் ரகுவன்ஷி 59 ரன்களை எடுத்திருந்தார்,.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தாலும் புள்ளிப் பட்டியலில் ஹைதராபாத் அணி மூன்றாவது இடத்தைத் தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The Kolkata Knight Riders won the 45th league match held at the Rajiv Gandhi International Stadium in Hyderabad.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.